வெள்ளவத்தையில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை
கடந்த வியாழக்கிழமை பட்டப்பகலில் வெள்ளவத்தை மகேஸ்வரி ஒழுங்கையில் உள்ள தமிழ் வர்த்தகரின் வீட்டுக்குள் காக்கிச் சட்டையுடன் வந்த நால்வர் அடங்கிய குழு, இங்கு வெலிக்கடைச் சிறையிலிருந்து தப்பி வந்த கைதிகள் பதுங்கியிருப்பதாகவும் தேடுதல்கள் நடத்தவேண்டுமெனவும் குறி உள்ளே நுழைந்துள்ளது.
இந்நிலையில், உள்ளே நுழைந்த குழு வீட்டிலிருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து காலால் மிதித்து நெற்றியில் துப்பாக்கியை வைத்து தாலிக்கொடியை அறுத்ததுடன் வீட்டில் இருந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான 25 பவுண் நகைகள் மற்றும் 7 ஆயிரம் டொலர்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

வெள்ளவத்தை மகேஸ்வரி ஒழுங்கையில் கடந்த வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் துணிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கொள்ளைச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது
,கடந்த வியாழக்கிழமை பட்டப்பகலில் வெள்ளவத்தை மகேஸ்வரி ஒழுங்கையில் உள்ள தமிழ் வர்த்தகரின் வீட்டுக்குள் காக்கிச் சட்டையுடன் வந்த நால்வர் அடங்கிய குழு, இங்கு வெலிக்கடைச் சிறையிலிருந்து தப்பி வந்த கைதிகள் பதுங்கியிருப்பதாகவும் தேடுதல்கள் நடத்தவேண்டுமெனவும் குறி உள்ளே நுழைந்துள்ளது.
இந்நிலையில், உள்ளே நுழைந்த குழு வீட்டிலிருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து காலால் மிதித்து நெற்றியில் துப்பாக்கியை வைத்து தாலிக்கொடியை அறுத்ததுடன் வீட்டில் இருந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான 25 பவுண் நகைகள் மற்றும் 7 ஆயிரம் டொலர்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற போதிலும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.