அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம்
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம், பாராளுமன்ற அமர்வுகளுக்கே 3 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் பிரித்தானிய வரலாற்றிலேயே இது தான் முதல் தடவையாக, 3 கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் தமிழர்களின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
இது நிச்சயமாக, ஈழத் தமிழர்களுக்கு பிரித்தானிய அரசு எவ்வகையில் ஆதரவு தெரிவித்துள்ளது என்பதனை நன்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய கூட்டத்தில், பிரித்தானியாவின் முக்கிய எம்.பீக்கள் பலர், அமைச்சர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள், சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள், ஐ.நா வின் நிபுணர் குழு அங்கத்தவர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் , மற்றும் தமிழ் புத்திஜீவிகள் என்போர் கலந்துகொண்டுள்ளார்கள். இன்று நடைபெறும் இம் மாநாட்டில் முக்கியமான பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது .
10.40AM: ஆளும் கட்சி எம்.பியான ரொபேட் ஹல்போன் , இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்றும், போர் குற்றம் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டும் அல்லாது, இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஆழும் கட்சியின் எம்.பியின் இக் கூற்றுக்கு மிகவும் பலம்மிக்கதாக இருக்கும் என நம்பப்படுகிறது.