புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

 புனர்வாழ்வு முகாமில் இன்னும் 241 முன்னாள் போராளிகளே உள்ளனராம் ; என்கிறது அரச அறிக்கை 
முன்னாள் போராளிகள் 108 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதனையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்று வந்தனர்.

அவர்களில் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்ற முன்னாள் போராளிகளில் 108 பேர் சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 9ஆம் திகதி வவுனியா நகர மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பன்னிரண்டாயிரம் போராளிகள் அரச படைகளிடம் சரணடைந்தனர். அதில் பதினோராயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஒரு பேர் புனர்வாழ்வின் பின் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்னும் 241 பேர் மட்டுமே புனர்வாழ்வு பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ad

ad