வந்துவிடக்கூடாது என்பதில் பதட்டம் நிறைந்த கவனத்துடன் இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, 3 லட்சம் டாலர் பரிசுத் தொகை வழக்கு, 4 தொகுதி களில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கு ஆகியவை தனக்கு சவாலாக உள்ள சூழலில், இந்தியாவின் கவனத்தைத் தமிழகம் பக்கம் திருப்பக்கூடிய இன்னொரு பெரிய வழக்கு, அதுவும் சி.பி.ஐ. விசாரணை வளையத்திற்குள் வந்து விடக்கூடாது என்பதே முதல்வரின் கவனத்திற்குக் காரணம்.
கிரானைட் பி.ஆர்.பழனிச்சாமி, கார்னட் வைகுண்டராஜன் என அரசுக்கு வேண்டிய தொழில் மன்னர்கள் ஒருகட்டத்தில் அதே அரசால் சிக்கலுக் குள்ளானதுபோல இப்போது மணல் மன்னர் ஆறுமுகச்சாமி சிக்கியிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறுமுகச்சாமியின் ஆளான பழனிச்சாமியின் பெயரில்தான் மணல் லோடிங் காண்ட்ராக்ட் உரிமம் உள்ளது. இதில் முறைகேடு நடப்பதாக மணலைப் பயன்படுத்தும் கட்டுமானத் தொழில் சார்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற தனி பெஞ்ச் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறை யீட்டை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை யிலான பெஞ்ச் விசாரிக்கிறது. சி.பி.ஐ விசாரணை என்பதற்கு இடைக்கால ஸ்டே கொடுக்கப்பட்டி ருந்தாலும் மணல் தொடர்பான விசாரணை முனைப் பாக நடைபெறுகிறது.
இறுதித் தீர்ப்பில் சி.பி.ஐ விசாரணை என உத்தர விடப்பட்டால் பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள், காண்ட்ராக்ட்டர்கள் எல்லோரும் விசா ரணைக்குள் சிக்குவார்கள். கைது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு இந்திய அளவில் ஊடகங்களால் பெரிதாக்கப் படும். தாது மணல், கிரானைட், சவுடு மணல் இவற்றை கணக்கில் சேர்க்காமல் ஆற்று மணலில் மட்டுமே. ஆண்டுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் வரும் தனிப்பட்ட வருவாய் எங்கே யாருக்குப் போகிறது? அது வெளிப்பட்டால், மிகப்பெரிய ஸ்காண்டல் என தேசிய அளவில் கவனம் பெற்று, எம்.பி. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு கடும் சவால் உருவாகும். இவற்றை யெல்லாம் யோசித்து, உஷாரானார் ஜெ. அதன்விளைவுதான், காஞ்சி மாவட்டத்தில் ஆற்றுமணல் அள்ள ஒரு மாத காலத் தடை என்ற கலெக் டரின் உத்தரவு என்கிற தலைமைச் செயலக அதிகாரிகள், மற்றொரு ரிப்போர்ட் பற்றியும் கூறுகின்றனர்.
எரிசக்தித் துறை செயலாள ரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் லக்கானி நேர்மையானவர். அவ ரிடம்தான் மணல் பற்றிய முழுமை யான ரிப்போர்ட் கேட்டிருந்தார் ஜெ. நேரில் சென்று ஆய்வு செய்தார் ராஜேஷ் லக்கானி. ஆற்றிலிருந்து மணல் எடுப்பது பொதுப்பணித் துறையின் பணி. அந்த மணலை வாரி தனியே குவிப்பதற்குத்தான் ஆறுமுகச் சாமி தரப்புக்கு லைசென்ஸ் தரப் பட்டிருக்கிறது. இப்படி மணலைக் குவிப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பில் தனி யார்டு அமைத்து, அங்கிருந்து மணல் விற்கப்பட்டு வருகிறது. மணலின் விலையை அரசுதான் நிர்ணயித்துள்ளது. தேவை யான மணலுக்கு டி.டி. எடுத்துக் கொடுத்து வாங்கிச் செல்லவேண்டும். அந்த டி.டி. விவரங்களை ராஜேஷ் லக்கானி பரிசீலித்தபோது, அத்தனை டி.டிகளும் ஊத்தங்கரையில் உள்ள ஒரு வங்கியிலிருந்தே பெறப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, அரசாங்க விலையில் ஆறுமுகச்சாமி தரப்பே மொத்த மணலையும் வாங்கிக்கொண்டு, அதனைக் கூடுதல் விலைக்கே மற்றவர்களுக்கு விற்றுள்ளது. மணல் தேவையுள்ளவர்களோ, அரசுத் தரப்பின் செல்வாக்கு மிக்கவரான ஆறுமுகச்சாமியை எதிர்க்க முடியாமல் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
இந்த மணல் முறைகேடு காஞ்சிபுரத்தில் மட்டுமல்லாமல் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, முசிறி, கரூர், அரியலூர் மற்றும் தென்மாவட்டங்கள், வடமாவட்டங்கள் எனப் பல பகுதிகளிலும் நடந்துள்ளது. இதுபற்றிய முழு விவரங்களையும் முதல்வரின் பார்வைக்கு ரிப்போர்ட்டாக அனுப்பிவைத்தார் ராஜேஷ் லக்கானி. அதுபோல, பொ.ப.து. சூப்பிரண்டெண்ட் இன்ஜினியர்கள் மூலமாகவும் எவ்வளவு மணல் வியாபாரம் நாடெங்கும் நடந்துள்ளது, யார்டில் மணல் எவ்வளவு மறைத் துள்ளார்கள் என்ற விவரமும் தனியாக முதல்வர் அலுவலகத் தால் கேட்கப்பட்டது. இந்த ரிப்போர்ட்டுகளைப் பார்த்த முதல்வர், இது க்ளியர் சி.பி.ஐ கேஸ் என ஷாக்கானதன் விளைவுதான் மணல் விவகாரத்தில் அவர் காட்டிவரும் அக்கறைக்கான காரணம் என கோட்டை சீனியர்கள் விரிவாகவே விளக்கினார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி தந்த ரிப்போர்ட்டைத் தொடர்ந்து 8 அமைச்சர்கள் கொண்ட ரகசிய கமிட்டி ஒன்றையும் ஜெ. அமைத் தார். அதில் நால்வர் அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருடன் அப்போதைய பொ.ப.து. அமைச்சர் கே.வி.ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில்துறை அமைச்சர் தங்கமணி, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோரும் இடம் பெற்றனர்.
ஆறுமுகச்சாமி பெரியளவில் வளர்ந்துவிட்டாலும் ராசிக்காக சென்னையில் அவர் தங்குவது மாரீஸ் ஓட்டலில்தான். இந்த முறையும் அங்கிருந்தபடியே காய்களை நகர்த்தினார். அமைச்சர்களுக்கோ மணல் அதிகாரம் ஒரே நபரிடம் இருப்பதில் விருப்பமில்லை. அதுவும் குறிப்பாக, நால்வர் அணிக்கு. எனவே ஆறுமுகச்சாமியின் போட்டியாளரான ராமச்சந்திரன் தரப்பும் மந்திரிகளுடனான நேரடி சந்திப்பில் பங்கேற்றது. பேச்சுவார்த்தைகள் நீடித்தன. இந்த நிலையில்தான், கடந்த 11-ந் தேதியன்று பொ.ப.து.விலிருந்து கே.வி.ராமலிங்கம் மாற்றப்பட்டு அந்த இலாகா ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாறியது. மணல் பிசினஸில் சம்பந்தப்பட்டவர்கள் 12-ந்தேதி மாலை ஓ.பன்னீரைச் சந்திக்கச் சென்றனர். ஆறுமுகச்சாமியும் சென்றார். ஓ.பி.எஸ்ஸோ, "நான் இன்னும் சி.எம்.மைப் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டார். மந்திரிகளில் மெஜாரிட்டியானவர்கள் ஆறுமுகச் சாமிக்கு ஆதரவாக இல்லை என்பது தெரியவந்தது.
புதன்கிழமை (நவ.13) ஓரளவுக்கு க்ளியரானது. ராமச்சந்திரன் தரப்புக்குத்தான் மணல் அள்ளுவதற் கான லைசென்ஸ் தரலாம் என ஜெ.விடம் பரிந் துரைத்துள்ளனராம் நால்வர் அணியினர். ஆறுமுகச் சாமியின் ஆளான பழனிச்சாமி மீது எஃ.ப்.ஐ.ஆர் போடுவதுதான் அரசுக்கு பாதுகாப்பானது என அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க, அவர் மீது எஃ.ப்.ஐ.ஆர் போடப்பட்டு ரிமாண்ட் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட பழனிச்சாமி தலைமறைவாகி முன்ஜாமீனுக்கு முயற்சி செய்து வருகிறார். பவர்ஃபுல்லான ஆறுமுகச்சாமித் தரப்பை ஓவர்டேக் செய்திருக்கும் ராமச்சந்திரன் யார் என விசாரித்தோம்.
தி.மு.க ஆட்சியின்போது திருச்சியை மையமாகக் கொண்ட தமிழகத்தின் மத்திய பகுதியில் மணல் அள்ளும் பொறுப்பு கட்சியின் அப்போதைய எம்.பியும் இப்போதைய எம்.எல்.ஏவுமான தொழி லதிபர் கே.சி.பழனிச்சாமிக்குக் கொடுக்கப்பட்டது. வடமாவட்டத்திற்கான லைசென்ஸ் பெற்றவர் இதே ஆறுமுகச்சாமி. தென்மாவட்டங்களில் மணல் பிசினஸ் செய்தவர் ராமச்சந்திரன். இவருக்கு ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் போன்ற அமைச்சர்கள் பலத்த சப்போர்ட்டாக இருந்தனர். படிக்காசு போன்ற மணல் புள்ளிகளும் இப்போதும் ஆதரவாக உள்ளனர். கட்சி வேறு, தொழில் வேறு எனத் தெளிவாக வரையறை வைத்திருக்கும் ராமச்சந்திரனிடம் மணல் பிசினசுக் கான நெட்வொர்க்கும் உபகரணங்களும் கச்சிதமாக இருக்கின்றன. இவருக்கு பின்னணியில் மூளையாக செயல்படுபவர் ஆந்திராவைச் சேர்ந்த இளம் ரெட்டி தொழிலதிபர் ஒருவர் என்கி றார்கள் இந்தத் துறையில் அனுபவமுள்ளவர்கள்.
அவருடைய பிசினஸுக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை. தொழிலைத் தொழிலாகச் செய்பவர் என்று 8 அமைச்சர்கள் கொண்ட கமிட்டியில் பெரும்பாலானவர்கள் சிபாரிசு செய்ததன் அடிப்படையிலேயே ராமச்சந்திர னுக்குத் தற்போது மணல் அள்ளும் காண்ட் ராக்ட்டுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதனி டையே தென்மாவட்டங்களில் படிக்காசு என்பவர் தன் சொந்தக்காசைப் போட்டு, மணல் அள்ளும் இடங்களுக்கான பட்டா நிலங்களை வைத்தி ருக்கிறார். இவரும் ராமச்சந்திரன் ஆள்தான். ஜெ.வின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறது 8 மந்திரிகள் கமிட்டி. காரணம், ராமச்சந்திரன் குறித்து தி.மு.க. வில் பொறுப்பில் உள்ளார் என்பது போன்ற குற்றச் சாட்டுகள் முதல்வர் பார்வைக்கு வியாழன் மதியம் முதலிலிருந்தே போய்க் கொண்டிருக்கிறதாம்.
கோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணை என்ற வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் மணல் விவகாரத்திற்கு ஒரு பாதுகாப்பு சுவர் எழுப்பவேண்டும் என்ற அடிப்படையிலேயே காஞ்சி கலெக்டர் சித்திரசேனன் மீது சஸ் பெண்ட் நடவடிக்கை, அமைச்சர் கே.வி.ராம லிங்கத்தின் இலாகா மாற்றம், மணல் அள்ளும் காண்ட்ராக்ட்டிற்கு புதிய நபர் எனத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்பதை கோட்டை வட்டாரத் தினர் உறுதிப்படுத்துகின்றனர்.