சுனந்தா கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சுனந்தாவின் மரணத்தில் சதித் திட்டம் இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு, உண்மை வெளிப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். சுனந்தாவின் மரணம், கொலைதான் என எந்த அடிப்படையில் காவல்துறை முடிவுக்கு வந்தது என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று சசிதரூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறை ஆணையர், இறுதி அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதில் சுனந்தா இயற்கையாக மரணம் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. வாய் வழியாகவோ அல்லது ஊசி மூலமாகவோ விஷம் செலுத்தப்பட்டதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதால் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றார்.