ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு முரண்பாடுகள் நிறைந்ததாக இருப்பதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என டிராஃபிக் ராமசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தப்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதிக்கும் மனுவின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளது என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.