முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீளவும் அரசியலில் பிரவேசித்தமையினூடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான பிளவை எதிர்நோக்கியுள்ளது. அதுமாத்திரமின்றி பாரிய நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. நல்லாட்சி திட்டங்களை முழுமையாக இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான
குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனவரி 8 ஆம் திகதி வென்றெடுக்கப்பட்ட புரட்சியை பின்நகர்த்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் துணைப்போகமாட்டார்.
அவர் தனது கொள்கையின் கீழேயே தொடர்ந்தும் செயற்படுகின்றார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் எவரும் தன்னிச் சை யாக ஆட்சியமைக்க முடியாது. ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 8 ஆம் திகதி புரட்சியை பின்நகர்த்த ஒருபோதும் முனையமாட்டார். அவர் தனது கொள்கையின் கீழேயே தொடர்ந்தும் செயற்படுகின்றார்.
இதுவே எமது இறுதி பயணமாகும். இதனை கைவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது. ஆகவே மஹிந்தவிற்கு வாக்களித்து ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சியை தெரிவு செய்வதா அல்லது நல்லாட்சியை தெரிவு செய்து நாட்டை கட்டியெழுப்புவதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். இதுவே எமது இறுதி பயணமாகும். இதனை கைவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது. ஆகவே மஹிந்தவிற்கு வாக்களித்து ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சியை தெரிவு செய்வதா? அல்லது நல்லாட்சியை தெரிவு செய்து நாட்டை கட்டியெழுப்புவதா? என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.