வாகன இலக்கத்தகடுகளின் ஆங்கில எழுத்துக்களை அகற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வாகனப் பதிவுகளின் போது பிரதேசங்களை அறிந்து கொள்வதற்காக இலக்கத்தகடுகளில் பொறிக்கப்படும் ஆங்கில எழுத்துக்களை அகற்றுவதற்கு அமைச்சரவை யின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
வருடாந்த வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் போதும் மாகாணங்களுக்கிடையில் வாகன உரிமைகள் மாற்றப் படும்போதும் வாகன இலக்கத்தகடுகளை மாற்றுவதற்கு பாவனையாவார்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ள தாகத் தெரியவந்துள்ளது.