புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2024

இனவாத அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை நீங்கள் எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? [Wednesday 2024-12-04 18:00]

www.pungudutivuswiss.com


யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும்  நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமா

ர் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது.

இரண்டு ஆயுதப்போராட்டங்களும் அரசாங்கத்தினால் மௌனமாக்கப்பட்டன.இரண்டு ஆயுதப்போராட்டங்களும் நியாயபூர்வமானவை.

மக்கள் ஏன் ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதற்கான நியாயபூர்வமான காரணங்கள் உள்ளன.

அங்கிருந்தே நாங்கள் வருகின்றோம், ஆனால் இந்தநியாயபூர்வமான பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் ஒரு தரப்பை தடைகள் இன்றி செயற்படவும் நினைவுகூரல்களில் ஈடுபடவும் அனுமதிப்பதும்,ஏனைய தரப்பின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் நியாயமான விடயம் என நான் கருதவில்லை.

நினைவேந்தல் தொடர்பான இந்த கட்டுப்பாடுகள் 2011ம் ஆண்டு சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டவை. உங்கள் அரசாங்கம் இனவாத அரசாங்கம் என குறிப்பிடும் அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த சுற்றிக்கை வெளியானது.

அந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட நீங்கள் எப்படி நினைவுகூரல்களை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கும் சுற்றுநிரூபத்தை நீங்கள் நடைமுறைப்படுத்தும்போது அது முற்றாக நியாயமற்ற விடயம்.

இந்த தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என நான் இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன். பயங்கரவாத தடைச்சட்டத்தை வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் பயன்படுத்தக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

ad

ad