2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கொலை வழக்குடன் தொடர்புடைய மூன்று நபர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரை செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் இணைந்து பதாகைகளை ஏந்தியவாறு உயர் நீதிமன்ற வாயிலில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். |