
பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி ( 76) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..