![]() காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வா |
-
31 ஜூலை, 2022
அரசியல் கைதிகளுக்கு முதலிடம் - இல்லாவிட்டால் ஒத்துழைக்க முடியாது
பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட சர்வ கட்சி ஆட்சி தான் ஒரே வழி!
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு சர்வ கட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக வந்தால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட அது தான் ஒரே வழி. ஆனால் அது உண்மை தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
28 ஜூலை, 2022
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் பிளவு
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் பெரிய
சீனாவுடன் பேசுமாறு கை காட்டியது ஐ.எம்.எவ்!
![]() இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது |
புலம்பெயர் தமிழர்கள் இரகசியப் பேச்சுக்கு அழைத்தனர் !
![]() தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும், எதிர்கால தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளை மீதப்படுத்த கூடாது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார் |
27 ஜூலை, 2022
மஹிந்த, பசில் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு!
![]() முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை, ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் உயர்நீதிமன்றத்தால் இன்று நீடிக்கப்பட்டது. |
ஜனாதிபதி ரணிலுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!
![]() அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் சந்தித்தார். ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார் |
எங்கே கொன்று புதைத்தீர்கள்?
![]() அன்று தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை கைது செய்து அடைப்பதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது,அவசர கால சட்டத்தை மீண்டும் திணிப்பதற்கு இன்று விவாதம் நடைபெறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
அவசர காலச்சட்டத்துக்கு அங்கீகாரம்!
![]() அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் கிடைத்தன. |
மேலும் 14 நாட்கள் சிங்கப்பூரில் தங்க கோட்டாவுக்கு அனுமதி
![]() முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன |
26 ஜூலை, 2022
செப்டெம்பர் கூட்டத்தொடரில் நெருக்கடி!
![]() ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்படும். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து மேலும் நெருக்கடி நிலையொன்று உருவாகும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார் |
கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம்! உருத்திரகுமாரன் அழைப்பு
![]() சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது |
ஐஎம்எவ் உடன்பாடு பின்தள்ளிப் போனது!
![]() எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது |
24 ஜூலை, 2022
WelcomeWelcome கோட்டா, மஹிந்தவை பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
![]() இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடிய அரசு தடைகளை விதிக்க வேண்டும் என்று லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார் |
ஜனாதிபதி ரணிலுடன் பிரித்தானிய அமைச்சர் தொலைபேசியில் பேச்சு!
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது |
22 ஜூலை, 2022
முப்படையினருக்கும் அதிகாரம்!- வர்த்தமானியை வெளியிட்டார் ரணில்.
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் |
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் - மன்னிப்புச் சபை கண்டனம்!
![]() காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு இது ஏற்றுக்கொள்ள முடியாதது அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளது |
கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!
![]() ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது |
பொறுத்திருந்து பார்ப்போம்!
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
காலிமுகத்திடலில் தாக்கப்பட்ட பிபிசி ஊடகவியலாளர்கள்!- நடந்தது என்ன?
![]() “நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார். |