![]() யாழ்ப்பாணம்- வல்வெட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது |
-
3 அக்., 2022
பொலிகண்டியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்! [Monday 2022-10-03 07:00]
றுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்! [Monday 2022-10-03 07:00] |
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று காலமானார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இவருக்கு, பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெளத்த ஆதீக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
ஜெனிவாவில் நெருக்கடி- 6 நாடுகள் மட்டுமே இலங்கைக்காக கைதூக்கும்!
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது. ஆறு நாடுகள் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அச்சம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன |
ஜெனிவாவில் நெருக்கடி- 6 நாடுகள் மட்டுமே இலங்கைக்காக கைதூக்கும்!
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது. ஆறு நாடுகள் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அச்சம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
15 வயது மாணவி வன்புணர்வு!- யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் கைது.
![]() யாழ்ப்பாணத்தில், காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
இந்தோனீசிய கால்பந்து போட்டியில் கலவரம்: குறைந்தது 174 பேர் பலி
ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சூர்யகுமார் யாதவ்- குவியும் பாராட்டுகள்.
ழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி! உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது
1 அக்., 2022
4 நகரங்களை ரஷ்யாவோடு இணைத்த புட்டின்: தனது நாடு என்று அறிவித்து மகிழ்ந்தார்
திலீபனின் ஒப்பற்ற தியாகத்தை மலிவு விலையில் விற்பதை அனுமதிக்கப் போகிறோமா?
![]() திலீபன் நினைவு நிகழ்வை அரசியல் செய்ய முனைந்தவர்கள் தொடர்பாக, திலீபன் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினரான, மாவீரர் அறிவிழியின் தந்தை மனோகரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். |
உக்ரைன் பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைப்பு - ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்
30 செப்., 2022
ஒரு நாள் முழுக்க அசைவ உணவுகளை தவிர்க்கவிருக்கும் சுவிஸ்
![]() உலக சைவ தினமாக கொண்டாடப்படும் அக்டோபர் 1-ஆம் திகதி சுவிட்சர்லாந்து ஒரு நாள் முழுக்க சைவ உணவுக்கு மாற உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதற்காகவும், பூமியைக் காப்பாற்ற உதவுவதற்காகவும், சுவிட்சர்லாந்து அக்டோபர் 1-ஆம் திகதி Swisstainable சைவ தினத்தன்று, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே உண்ணவுள்ளது. |
மலேசியாவில் விடுதலைப் புலிகளைத் தடைப்படியலிருந்து நீக்குவது தொடர்பன மேன்முறையீடு தள்ளுபடி
ஆஸ்ரேலியாவில் சைபர் தாக்குதல்: சுமார் 10 மில்லியன் பேரின் தரவுகள் திருடப்பட்டன!!
தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார்.
சாவடைந்த செந்தாழன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக 2001ம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடக்கம் 2009 மே 18 வரை தாயகத்திலும், புலம் பெயர் தேசத்திலும் விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடியவர்.
சாவடைந்த செந்தாழன் அவர்கள் தாயகத்தில் மணிவண்ணன் பயிற்சிப் பாசறை, ஜொனி அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, பட்டய அறிவியற் கல்லூரி, அனைத்துலகத் தொடர்பகம், கேணல் கிட்டு அரசறிவியற் கல்லூரி போன்றபல பகுதிகளில் பயிற்சி பெற்று, 2006ம் ஆண்டு ரஷ்ய மொழி ஆற்றும் அரசறிவியல் படிப்பதற்காக ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2009ம் ஆண்டு வரை ரஷ்யாவில் தனது பணியை மேற்கொண்டு வந்தார்.
புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்த செந்தாழன் அவர்கள் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் கடந்த 12 வருடங்களாக வாழ்ந்து. தாய் நாட்டிற்காகவும் கடமை செய்து வந்ததுடன் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகர் வாழ் மக்களுடனும் அன்பைப் பேணி வந்துள்ளார்.
இவரது இறுதி வணக்க நிகழ்வுகள் 24.09.2022 அன்று Crématorium de la Robertsau,15 RUE DE L'ILL ,67000 STRASBOURG ,(ROBERTSAU) அங்கு நடைபெற்றிருந்தது. இறுதி வணக்க நிகழ்வில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் வாழ் தமிழ் மக்களும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர்களும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அமைப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் உரையாற்றியிருந்தார். அத்துடன் சக போராளிகளும் நினைவுரையை ஆற்றியிருந்தனர்.
செந்தாழன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு ஸ்ராஸ்பூர்க் வாழ் மக்களின் கண்ணீரால் நிறைந்திருந்தது.
இவரது வித்துடல் 26.09.2022 அன்று Cimetiére Nord, 15 RUE DE L'ILL ,67000 STRASBOURG (ROBERTSAU) துயிலும் இல்லத்தில் தேசிய கொடி போர்த்தி விதைக்கப்பட்டது.
தேசிய சபையில் இரண்டு குழுக்களை அமைக்க முடிவு! [Friday 2022-09-30 07:00]
![]() புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது |
நினைவேந்தல் வழக்கில் இருந்து நிரோஷ் விடுவிப்பு!
![]() கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது. |