-
17 நவ., 2022
"காந்தி கொலைக்கு உதவிய கோபால் கோட்சேவை காங்கிரஸ் விடுவித்தபோது இந்தியாவின் இதயம் எங்கே போனது..." - கு. ராமகிருஷ்ணன்
பெண் விடுதலைப் புலி சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை..! ஆதாரத்தை பட்டியலிடும் முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா
திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மகிந்த! முன்னாள் விமானப்படை அதிகாரி தகவல்
வரி அதிகரிப்பால் உயரப் போகும் பொருட்களின் விலைகள்!
![]() திருத்தப்பட்ட செஸ் வரி நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப, 187 HS குறியீடுகளின் கீழ் 637 பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் |
பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும்
![]() வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ, புளொட் கோரிக்கை
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ மற்றும் புளொட் ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன |
16 நவ., 2022
தீர்வு விவகாரத்தில் ஐ.நாவின் தலையீடு அவசியம்
![]() ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது |
சம்பந்தனின் கூட்டத்துக்கு மாவை தவிர தலைவர்கள் யாரும் வரவில்லை!
![]() வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வே தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்பதை வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்துவதற்காக, நேற்று மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்து |
ஜி20 மாநாட்டிற்கு மத்தியில் யுக்ரேன் தலைநகர் கீவில் தாக்குதல் நடத்திய ரஷ்யா
விரைவில் பலாலி ஊடாக விமான சேவை- இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
![]() இந்த வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையசேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் |
படையினருக்கு காணிகளை தாரை வார்க்கும் ஆளுநர் - எதிர்ப்பு தெரிவித்த மக்களுடன் எகிறினார்
![]() வட மாகாண காணிகளை முப்படையினருக்காக சுவீகரிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது |
அடுத்தடுத்து மயங்கி விழுந்த 44 மாணவிகள்!
![]() மாத்தளை- கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
14 நவ., 2022
விமல், வாசு, திஸ்ஸவுக்கு கடும் எதிர்ப்பு- தப்பியோட்டம்
![]() பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய மூவரும் நேற்றைய தினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பொதுமக்களால் ஊ…ஊ சத்தமிட்டு துரத்தப்பட்டுள்ளனர் |
வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார் ஜனாதிபதி ரணில்!
![]() 2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும் |
கொழும்பில் போராட்டம் நடத்திய ஹிருணிகா உள்ளிட்ட 14 பேர் கைது
![]() கொழும்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
மொட்டு எம்.பிக்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!
![]() நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர் |
சுவிட்சர்லாந்தில் உக்ரேனிய அகதிகளுக்கு இனி கார்கள் இல்லைசுவிட்சர்லாந்தில் பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு, உக்ரேனிய அகதிகள் தங்கள் கார்களை விற்க வேண்டும்.
சிறையிலிருந்து விடுதலையான நளினி செய்யவிருக்கும் முதல் செயல்!
![]() சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வந்த நளினி செய்தியாளர்கள் சந்திப்பின் போது முகத்தை மூடி கொண்டு வெட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி வேலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது திடீரென பின்னால் திரும்பி மோட்டரை அணையுங்கள் என சொன்னார் |
வேறுபாடுகளை மறந்து சம்பந்தன் வீட்டுக்கு வாருங்கள்
![]() எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக- கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் |
இன்று வரவுசெலவுத் திட்டம்!
![]() நிதி அமைச்சர், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் , பாராளுமன்றத்தில் இன்றுசமர்ப்பிக்கப்படவுள்ளது. |