சூடான் தலைநகர் கார்ட்டூமில் சூடான் இராணுவத்துக்கும் துணை இராணுவப்
சூடானின் இராணுவ தலைமையகம் மற்றும் மத்திய கார்ட்டூமில் உள்ள
![]() வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார் |
கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறிப் பல இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் 23 வயது இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது |
![]() மன்னார் - சிலாவத்துறை பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 111,000 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது |
![]() பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதன் உள்நாட்டு இயக்குநர் சென் சென் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் |
![]() ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது |
இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை. ஜனாதிபதிக்கான குறிப்பிட்ட கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள இரண்டு விசேட அறிக்கையாளர்களும் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர். சுற்றுலா விசாவில் ஓமானிற்கு சென்ற 90 பெண்கள் இலங்கை அரசாங்கத்தின் புகலிட இல்லம் உட்பட புகலிட இல்லங்களில் சிக்குண்டனர் என தமக்கு கிடைத்துள்ளதாக அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். பல பெண்கள் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பு என்ற போர்வையிலேயே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில பெண்கள் ஏலத்தில் விடப்பட்டனர் தனியார் வீடுகளில் வைக்கப்பட்டு துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டனர் போதுமான உணவோ அல்லது உறங்குவதற்கான வசதிகளோ இருக்கவில்லை எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். |
![]() இரணைமடு குளத்திற்கு தெற்குப்புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாளாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார் |
![]() குடும்ப தகறாறு முற்றி மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சுட்டதில், மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. |
![]() இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது |
![]() இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. 1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது |
![]() சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். |
![]() சாவகச்சேரி - ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது. |
![]() 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் |