![]() வடக்கு மாகாணத்தில் நகர்ப்பகுதி வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் உரிய சமிஞ்சைகள் இன்றி வீதிகளில் விரைவாக திரும்புதல் மற்றும் அதிக வேகம் போன்றவற்றிற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. |
-
9 அக்., 2024
சமிக்ஞையின்றி திரும்பும் வாகனங்களுக்கு சிக்கல்! [Wednesday 2024-10-09 05:00]
சங்கு கூட்டணி இன்று வேட்புமனுத் தாக்கல்! [Wednesday 2024-10-09 05:00]
![]() எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சங்கு சின்னத்தில் திருகோணமலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இந்தக் கூட்டணி போட்டியிடுகிறது. திருகோணமலையில் வீடு சின்னத்தில் போட்டியிட இணங்கியுள்ளது. |
10 இலட்சம் ரூபாவை தீயிட்டு எரித்தவர் கைது! [Wednesday 2024-10-09 05:00]
![]() யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்த, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
8 அக்., 2024
இன்று அல்லது நாளை முடிவெடுக்கிறார் சரவணபவன்! [Tuesday 2024-10-08 17:00]
![]() தமிழரசுக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாத கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இன்று அல்லது நாளைய தினம் அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் |
ஜெனிவா தீர்மானத்தை எதிர்க்க அனுர அரசாங்கமும் முடிவு! [Tuesday 2024-10-08 17:00]
![]() புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. |
7 அக்., 2024
சுமந்திரனின் அடாவடியால் சட்டத்தரணி தனஞ்சயனும் விலகினார்! [Monday 2024-10-07 17:00]
![]() 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவிருந்த சட்டத்தரணி தனஞ்சயன், தனது முடிவை மாற்றிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கூறியிருப்பதாவது |
6 அக்., 2024
யாழ். மாவட்ட “சைக்கிள்” வேட்பாளர்கள் கையெழுத்து! Top News [Saturday 2024-10-05 17:00]
![]() எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டன |
தென்னிலங்கை தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலையாகும்! [Saturday 2024-10-05 06:00]
![]() ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும் என யாழ். பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது |
4 அக்., 2024
அலைபேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் உயிர்மாய்ப்பு! [Friday 2024-10-04 06:00]
![]() யாழ்ப்பாணத்தில் அலைபேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும், லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தவசுதன் சாருஜன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான் |
சங்கு சின்னத்தில் போட்டி - குத்துவிளக்கு கூட்டணி அறிவிப்பு! [Friday 2024-10-04 06:00]
![]() ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகிறோம் என ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார் |
30 செப்., 2024
முடக்க நிலையை நோக்கி ஐதேக - ஐமச கூட்டணி பேச்சு! [Monday 2024-09-30 05:00]
![]() எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளது. |
பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும்! [Monday 2024-09-30 05:00]
![]() தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார் |
வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணையும் கோரிக்கை தொடர்பில் விக்னேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஓரணியில் எதிர்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். நாங்கள் தமிழரசு காட்சி தவிர்ந்த ஒரே நிலைப்பாட்டில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் தமிழ் பொதுக் கட்டமைப்பாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தமிழரசு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடும் கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவிக்க முடியாது. ஏனெனில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சக தமிழ் கட்சிகள் தலைவர்களுடன் பேசி இறுதி முடிவை தெரிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். |
ஆதிக்கப் போக்கில் தமிழரசு - இணைய மறுக்கிறது புளொட்! [Monday 2024-09-30 05:00]
![]() தமிழரசுக் கட்சியின் அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே. வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாக பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார் |
29 செப்., 2024
28 செப்., 2024
பாடசாலை நிகழ்வுகளுக்கு பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது! - பறந்தது உத்தரவு. [Saturday 2024-09-28 17:00]
![]() பாடசாலைகளில் நடத்தப்படும் கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். |
26 செப்., 2024
குத்துவிளக்கு கூட்டணி தனியாக போட்டி - பொதுக்கட்டமைப்பும் இன்று கூடுகிறது! [Thursday 2024-09-26 05:00]
![]() ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் சார்பிலேயே களமிறங்குவதென உறுதியாகத் தீர்மானித்துள்ளன |
வெற்றியை நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்! - இலங்கை ஜனாதிபதி விசேட உரை
அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்! [Wednesday 2024-09-25 18:00]
![]() மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளா |