![]() நாடாளுமன்ற அடையாள அட்டை தனக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரைப் பார்த்து கடுமையாக சாடினார். நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் |
-
5 பிப்., 2025
நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்த அர்ச்சுனா!- சூடாகிய சபாநாயகர். [Wednesday 2025-02-05 16:00]
அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை- மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்! [Wednesday 2025-02-05 16:00]
![]() பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். |
லசந்த படுகொலை சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை! [Wednesday 2025-02-05 16:00]
![]() த சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி மற்றும் முன்னாள் டிஐஜி உட்பட மூன்று நபர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தனது சட்ட ஆலோசனையை வழங்கியுள்ளா |
சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்க உத்தரவு! [Wednesday 2025-02-05 16:00]
![]() ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது |
சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்
யார் ஜனாதிபதியாக வந்தாலும் இனஅழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில்! [Wednesday 2025-02-05 05:00]
![]() எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இன அழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர் என வேலன் சுவாமிகள் கடுமையாக சாடியுள்ளார்.யாழ். - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். |
அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி- ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்கம் இரகசிய டீல்! [Wednesday 2025-02-05 05:00]
![]() அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது. அதேநேரம் அரிசி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் |
3 பிப்., 2025
கனடா மற்றும் மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி! [Saturday 2025-02-01 16:00]
![]() கனடா, மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்த கனடா! [Sunday 2025-02-02 17:00]
![]() அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் கனடா மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரிக்கு பதிலடியாக இவ்வாறு கனடாவும் வரி விதிப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள், பான வகைகள் தளபாடங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது |
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்! Top News [Sunday 2025-02-02 17:00]
![]() தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது |
31 ஜன., 2025
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர
அனுராவுக்கு முன்னால் தனது சொந்தப் பிரச்சனை பற்றி பிரசங்கம் நடத்திய அர்ச்சுணா MP
மதுபோதையில் கடைக்குள் அட்டகாசம்- மதகுரு கைது! [Friday 2025-01-31 05:00]
![]() வவுனியா, ரயில் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். |
கோண்டாவிலில் பாலியல் தொழில் - 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் கைது! [Friday 2025-01-31 05:00]
![]() யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று, கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல், மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் |
ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிப்பு! [Thursday 2025-01-30 16:00]
![]() மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார் |
அனுரவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்- தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு! [Thursday 2025-01-30 16:00]
![]() ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி ஐந்து பேருக்கு எதிராக தடை உத்தரவு கோரி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. |
30 ஜன., 2025
மாவை சேனாதிராஜா
Senathirajah, அக்டோபர் 27, 1942 - என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
தனது 82வது வயதில் 2025 சனவரி 29 இல் காலமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.[1][2] வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,[2] இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]
அரசியலில்
[தொகு]சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.[2] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.[2] 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.[2] 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.[2] 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]
சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.[3][4] ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[5] 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.[5][6]
2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.[8][9] 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[10] 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12][13][14]
செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.[15]
தேர்தல் வரலாறு
[தொகு]தேர்தல் | தொகுதி / மாவட்டம் | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1989 நாடாளுமன்றத் தேர்தல்[4] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 2,820 | தெரிவு செய்யப்படவில்லை |
2000 நாடாளுமன்றத் தேர்தல்[7] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 10,965 | தெரிவு |
2001 நாடாளுமன்றத் தேர்தல்[10] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 33,831 | தெரிவு |
2004 நாடாளுமன்றத் தேர்தல்[11] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 38,783 | தெரிவு |
2010 நாடாளுமன்றத் தேர்தல்[12] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 20,501 | தெரிவு |
2015 நாடாளுமன்றத் தேர்தல்[16] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 58,782 | தெரிவு |
2020 நாடாளுமன்றத் தேர்தல் | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 20,358 | தெரிவு செய்யப்படவில்லை |
வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 82 ஆவது வயதில் 2025 சனவரி 29 திகதி இரவு உயிரிழந்தார்