புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2025

கனடா மற்றும் மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி! [Saturday 2025-02-01 16:00]

www.pungudutivuswiss.com

கனடா, மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தலாய் இருக்கும் ஒப்பியாய்டு விநியோகத்தில் சீனாவின் பங்கு இருப்பதாய் கூறி அந்நாட்டின் இறக்குமதி பொருள்களுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஒப்பியாய்டுகள் போன்ற போதை வஸ்துக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுக்கு இன்று முதல் 25 சதவீதம் வரிவிக்கப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.

டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad