வெள்ளவத்தை முக்கொலை சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! விளக்கமறியலில் வைக்க உத்தரவு
வெள்ளவத்தைப் பகுதியெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முக்கொலை தொடர்பான பிரதான சந்தேக நபர் குமாரசாமி பிரசான் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் திருமதி புஞ்சிஹேவா உத்தரவிட்டார்.
தாய்,தந்தை மற்றும் சகோதரி ஆகியோரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பிரசான் கொழும்பிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடவத்தையில் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இச்சந்தேக நபரை வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று பிற்பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இவரிடம் எதிர்வரும் 28ம் திகதி முழுமையான வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டதுடன், அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
கொழும்பு இராமகிருஷ்ணா டெரஸ் பகுதியில் கடந்த 18ம் திகதி தாய்,தந்தை,சகோதரி ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராணியப்பு தோட்டத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரையும் சந்தேக நபரான பிரசான் கொழும்புக்கு அழைத்து வந்தமையினாலும் அவர்களைச் சடலங்களாக மீட்கப்பட்ட பின்னர் பிரசான் தலைமறைவான காரணத்தினாலும் பொலிஸார் இவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.