மட்டு. தமிழரசுக்கட்சி விருப்பு வாக்கில் ரட்ணம் முதலாம் இடம்! பிள்ளையானும் வெற்றி!
தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராசையா துரைரத்தினம் 29148 வாக்குகளை பெற்று முதலாம் இடத்திற்கு வந்துள்ளார். அம்பாறை காரைதீவை பிறப்பிடமாக கொண்ட இவர் 1988ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபை தேர்தலின் போதும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார். இம்முறை தமிழரசுக்கட்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தில் தமிழரசுக்கட்சியின் தலைமை வேட்பாளர் கே.துரைராசசிங்கம் 27719 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். முன்றாம் இடத்திற்கு வந்துள்ள வெள்ளிமலை என்று அழைக்கப்படும் ஞா.கிருஷ்ணபிள்ளை 20200 வாக்குகளை பெற்றுள்ளார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்டவராவார்.
நான்காம் இடத்தில் ரெலோவை சேர்ந்த இந்திரகுமார் பிரசன்ன 17304 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஐந்தாம் இடத்தில் கல்லாற்றை சேர்ந்த வங்கி முகாமையாளர் மா. 16681 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆறாவது இடத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவை சேர்ந்தவருமான ஜனா என்று அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரன் 16536 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் பிரதி தலைவர் ஹாபீஸ் நஷீhட அஹமட் 11,401 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.