இத்தாலி பலெர்மோ மாநிலத்தில் நடை பெற்ற மாவீரர் கேணல் பரிதி அவர்களின் வீர வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)
கடந்த 8.11.2012 அன்று பிரான்ஸ் பாரிஸ் நகரில் சிறிலங்கா இனவாத அரசின் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளருமான
மாவீரர் கேணல் பரிதி (றீகன்) அவர்களின் வீரவணக்க நிகழ்வு இத்தாலி பலெர்மோ மாநிலத்தில் 11.11.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 8:00 மணி யளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பமாக பொதுச் சுடர் ஏற்றல் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த சுடர் ஏற்றல் அகவணக்கம் மலர் வணக்கம் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட வீரவணக்க செய்தி வாசிக்கப்பட்டது. மற்றும் இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, இத்தாலிய ஈழத் தமிழர் மக்களவை.இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு போன்ற அமைப்புக்களின் வீரவணக்க செய்திகளும் வாசிக்கப்பட்டது.
இவ்வீரவணக்க நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர்கள், ஈழத்தமிழர் மக்களவைப்பிரதிநிதிகள், தமிழ் இளையோர் அமைப்பினர், ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளன நிர்வாகத்தினர், தமிழர் புனர்வாழ்வு கழகம் சமூகநல அமைப்பு திலீபன் தமிழ்சோலை மாலதி கலைப்பள்ளி அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பெரும் திரளான பொதுமக்களும் கேணல் பரிதி அவர்களுக்கு தங்கள் உணர்வு பூர்வமான வீர வணக்கத்தை செலுத்தி பரிதி அவர்கள் விட்டுச்சென்ற விடுதலைப் பணியை வீச்சோடு முன்னெடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டதோடு நிகழ்வுகள் நிறைவுற்றது.
Comments