கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் மற்றுமொரு ஆணுடன் வைத்து வாகனத்துடன் எரித்து கொலை
சம்பவதினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911 அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர். இது ஒரு கொலையா இல்லை தற்கொலையா என்று தெரியாத பொலிசார், இரண்டு கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஆனால் நேற்றைய தினம் இவர்கள் சில தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் இது ஒரு கொலை என அவர்கள் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
கண்டெடுத்த 2 உடல்களில் ஒன்று ஆணினுடையதும், மற்றொன்று பெண்ணினுடையதும் என்பதும், இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்பதும் ஆனால், முன் விரோதமே கொலைக்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது. இக் கொலை எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர இருக்கிறது.