1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணையை புலிகளுக்கு வாங்கினார்: வழக்கின் தீர்ப்பு !
மூன்று இளைஞர்கள் கனடாவின் பயங்கரவாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்க்ள். அவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். பிரதீபன் நடராஜாவும் ,சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜாவும்
விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்த வழக்கில் சிக்கியிருப்பவர்கள். மற்றும் அமெரிக்க அரசால் தேடப்படுபவர்கள் ஆவர். இவர்களுடன் ஒட்டாவாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் பயங்கரவாத செயல் புரிந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெயர் மொமின் காவ்ஜா. இவர் அல்குவைதா தீவிரவாத இயக்கத்தின், பின்லேடனை போற்றுபவர் என்றும், இங்கிலாந்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கு இப்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது:
கனடாவின் பயங்கரவாத சட்டத்தின் அர்த்தத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் இவர்களின் வழக்கறிஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. படு காரசாரமான விவாதங்களை இந்த 3 கைதிகளின் வக்கீல்கள் முன்வைத்துள்ளார்கள். கனடாவின் சட்டப்படி பயங்கரவாதம் என்பது, மதத்தின் அடிப்படையிலோ அரசியல் அல்லது கொள்கையின் அடிப்படையிலோ செய்யப்படும் காரியங்கள் பயங்கரவாத குற்றங்கள் எனப்படும். இந்த அர்த்தத்தை குறித்து சந்தேகங்கள் எழுப்பியிருக்கிறார் காவ்ஜாவின் வழக்கறிஞர். ’இந்தவிதமான சட்டத்தினால் இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தங்களுடைய மத நம்பிக்கையை வெளிப்படுத்தினாலே அது குற்றமாக கருதப்படும் வாய்ப்பு இருக்கிறது’ என்று கடும் வாதங்களை அவர் முன்வைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஒரு மில்லியன் டாலர் மதிப்பில் ஏவுகணைகளும் ஏகே 47 ரக துப்பாக்கிகளும் வாங்கிக் கொடுக்க முயற்சித்ததாக நடராஜா மீது அமெரிக்காவில் வழக்கு இருக்கிறது. ஸ்ரீஸ்கந்தராஜா விடுதலைப் புலிகளுக்கு பணம் மாற்றிக் கொடுத்தார் என்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்கித் தந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 2006ல் கைது செய்யப்பட்ட ஸ்கந்தராஜா பிணையில் வெளியே வந்து முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். தற்போது ஒட்டாவா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றுக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது.