பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பகல் யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. வடமாகாண சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் தமது வாய்களை கறுப்பு பட்டியினால் மூடிக்கட்டிக்கொண்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.