மனநலமற்ற 22 வயது மகள் தேவகியை வீட்டில் வைத்துவிட்டு வயல் வேலைக் குப் போய்விட்டார் தாய் பஞ்சவர்ணம். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார் தாய். வீடு திறந்து கிடந்தது. அறைக்குள் இருந்து மகளின் அழுகைக் குரல் வந்தது. ஓடிப்போய் பார்த்த தாயை, தள்ளிவிட்டு ஓடினான் எதிர்வீட்டு முனியம்மாவின் தம்பி குமரேசன். அறைக்குள் பாலியல் வல்லுறவால் அதிர்ச்சியடைந்து கதறிக்கொண்டி ருந்த தேவகியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பதுங்கியிருந்த குமரேசனை 27.12.12 மாலையில் கைது செய்தது போலீஸ்.