சுவிட்சர்லாந்தில் இன்று மிகக்கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. வீதிப்போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுவிஸ் நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பேர்ண் மாநிலத்தில் மட்டும் 70 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பேர்ண், மற்றும் சூரிச் மாநிலத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சூரிச் அப்போல்டெர்ன் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2.30மணியளவில் நடந்த விபத்தில் 6 கார்களும் ஒரு ரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் இச்செய்தி எழுதப்படும் வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.
சூரிச் கூப்ரிஸ் சுரங்கப்பாதை உட்பட பல சுரங்கவழி பாதைகளின் ஊடான பயணங்களுக்கு
இரு மணிநேரம் மேலதிகமாக செலவழிக்க வேண்டியிருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று சூரிச் சேபாக் வீதியும் கடுமையான பனிப்பொழிவால் மூடப்பட்டிருக்கிறது.
சூரிச் சர்வதேச விமான நிலையத்தில் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அநேகமான விமான சேவைகள் தாமதமாகவே நடத்தப்படுகிறது. அனைத்து விமானங்களும் ஆகக்குறைந்தது ஒரு மணிநேர தாமதமாகவே வந்து சேர்ந்தன.
ஜெனிவா விமான நிலையத்திலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் பல விமானங்கள் தாமதமாகவே வந்து சேர்ந்தன.
ஜெனிவா விமான நிலையத்திலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் பல விமானங்கள் தாமதமாகவே வந்து சேர்ந்தன.
பாசல் முல்கவுஸ் விமான நிலையம் நண்பகல் 12.20 தொடக்கம், 12.55வரை விமான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் 45 நிமிடம் முதல் 60நிமிடம் வரை விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டன.



7 0 0 7
Related posts: