ஆபாச சாமியார் நித்திக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறது "ஜெ.'’போலீஸ்.
மதுரை இளைய ஆதீனப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்த நித்தி, இழந்த தன் இமேஜை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தனது பிறந்தநாளை திருவண்ணா மலை ஆசிரமத்தில்(?) கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்தார். கூலிக்கு ஆள் பிடித்தாவது கூட்டத்தைக் காட்டவேண்டும் என்பது அவரது திட்டம். -நக்கீரன் நன்றி
அவர் முன்னதாகவே ஆசிரம முக்கியஸ்தரான ராயர் நாயுடுவுக்கு தகவல் கொடுத்ததால் திருவண்ணாமலை நகரெங்கும் பெரிய பெரிய வரவேற்பு ஃப்ளெக்ஸ் போர்டுகளை வைத்திருந்தனர். இதைப்பார்த்த பெண்கள் காறித் துப்பிவிட்டுப் போவதை போலீஸ் கவனித்தது. நித்தி தரப்போ "காசைப் பத்திக் கவலையில்லை. நிறைய ஆளுங்களைக் கொண்டுவாங்க. எல்லா வசதி யும் பண்ணித்தர்றோம். கரன்ஸி யால் குளிப்பாட்டறோம்'’என்று சேலம், நாமக்கல் பக்கமிருக்கும் ஆட்களுக்கெல்லாம் ஆசிரமத்தில் இருந்து போன் செய்தபடியே இருந்தனர்.
திருவண்ணாமலை வந்த நித்தி என்ன செய்தார்? என்று விசாரித்தபோது ""அதை ஏன் கேட்கறீங்க? எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டேங்கறார். இப்பவும் 7 பொம்பளைப் புள்ளைகள் மற்றும் ஆண் எடுபிடிகளோட நைட் பூரா பயணம் பண்ணி 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திருவண்ணா மலைக்கு வந்து சேர்ந்தார். பிறகு வக்கீல்கள் சிலரைக் கூப்பிட்டு, "நாமக்கல் ஜனனி இன்ஃபோடெக் செங்குட்டுவன், என்மீது மோசடிப் புகாரை அங்க இருக்கும் கலெக்டர்கிட்டயும் எஸ்.பி.கிட்டயும் கொடுத்திருக்கார். "கவர்மெண்ட் முன்ன மாதிரி நமக்கு இப்போ சாதகமா இல்லை. திடீர்னு அந்த அம்மா கைதுபண்ணச் சொன்னாலும் சொல்லிடும் அதனால சட்டப் பாதுகாப்புக்கு என்னவழின்னு பாருங்க'ன்னு சொன்னாரு. பிறகு "பிறந்தநாளை முன்னைவிட பிரமாதமா கொண்டாடணும். பிறந்தநாள் ஊர்வலமும் ரொம்ப பிரமாண்டமா நடக்கணும். இல்லைன்னா நம்மளை எல்லோரும் மட்டமா பார்ப்பாங்க. இதைப் புரிஞ்சிக்கிட்டு ஏற்பாடுகளைப் பண்ணுங்க'ன்னு சொன் னார். அப்புறம் சிலரை மட்டும் தனியா அழைச்சிக் கிட்டு ரூமுக்குள் போய்ட்டார். "அவர் சுயரூபம் தெரிஞ்சும் திடீர்னு என்னை மாதிரி ஆட்களால் விலக முடியலை. மிரட்டலையும் அவர் போடும் பொய் வழக் கையும் தாங்கற சக்தி இல்லாததுதான் காரணம்'' என்றார் அதே ஆசிரமத்தில் இருக்கும் அந்தக் காவி.
நித்தியின் பிறந்தநாளான 6-ந் தேதி திருவண்ணா மலையை ரவுண்ட்ஸ் வந்தபோது முதல்நாள் காட்சி தந்த நித்தியின் ஃப்ளெக்ஸ் போர்டுகள் முழுதும் காணா மல் போயிருந்தன. கோயில் முகப்பில் இருந்த நித்திக் கான அலங்கார மேடையும் எஸ்கேப் ஆகியிருந்தது.
""போலீஸ்காரா எங்க நடத்த விடறா? எல் லாத்தையும் ஊத்தி மூடிட்டா. எல்லாம் அந்த அம்மாவோட வேலை. தேவையில்லாம சாமி யைப் பகைச்சிக்கிறா. அதற்கான பலனை அவா அனுபவிக்கத்தான் போறா''’என்று பொரிந்து தள்ளிவிட்டுப் போனார். ஆசிரமத்திற்குள் எட்டிப் பார்த்தோம். எப்போதும் வசதியான படித்த ஆண், பெண் சீடர்களோடு காட்சிதரும் நித்தி, இப்போது கிராமப்புறங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட, -அவரது ஹைடெக் ஆசிரமத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத கூட்டத்துக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தார். அங்கு நித்தி போலவே சிறுவர்-சிறுமிகளுக்கு வேஷம் போட்டிருந்தனர். ஒரு குழந்தையின் அம்மாவிடம் இது குறித்துக் கேட்டபோது ""ஒரு குழந்தைக்கு செலவுபோக, ஆயிரம் ரூபா வீதம் கொடுக்கறாங்க... அதுக்காகத்தான்''’என்றார் வெள்ளந்தியாய்.
போலீஸின் நடவடிக்கை குறித்து டி.எஸ்.பி. சங்கரனிடம் கேட்டபோது, ""நித்தி மீது பல வழக்குகள் இருக்கு. அதனால் பப்ளிக் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கலாமான்னு மேலிடத்தில் கேட்டோம். "சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும், அதனால் அனுமதிக்காதீங்க'ன்னு சொல்லிட்டாங்க. அத னால்தான் ஊர்வலம் கொண்டாட்டம் எல்லாத் துக்கும் தடைபோட்டுட்டோம். விளம்பரங்களையும் எடுக்கச்சொல்லிட்டோம்''’என்றார் அழுத்தமாய்.
வழக்கறிஞர் நீல.மூர்த்தியோ ""போலீஸ், அந்த நித்தியோட பிறந்தநாளைக் கொண்டாட அனுமதிச்சாலும் நாங்க அனுமதிக்கமாட்டோம். நித்தி மாதிரி மோசமான பேர்வழி உலகத்திலேயே இருக்கமுடியாது. நித்தி பல இளம்பெண்களையும் குடும்பத் தலைவிகளையும் மட்டும் சீரழிக்கலை. கடவுளையும் அசிங்கப்படுத்துறவர். வழக்கமா நித்தி பிறந்தநாளில் ஊர்வலமா எடுத்துவரும் அண்ணா மலையார் சகிதம், உண்ணாமுலையம்மை நிற்கும் சிலையைக் கூர்ந்து பாருங்க. உண்ணாமுலைக்குப் பக்கத்தில் தன்னையே அண்ணாமலையார் சிலையா செஞ்சி நிக்கவச்சிருக் கார். அந்த ஆள் பெண் கடவுளையும் விடலை பாருங்க. கர்மம் கர்மம்''’என்று தலையில் அடித்துக்கொண்டார்.
நித்திக்கு எதிரான சூறா வளி, அங்கே விசுவரூபமெடுத்து வீசிக்கொண்டிருக்கிறது.