இலங்கை அரசை பல தடவை காப்பாற்றிய ராஜிவவுக்கு மகிந்தர் பாடம் புகட்டினார் ?
சிறிலங்கா லிபரல் கட்சியின் தலைவரான ராஜீவ விஜேசிங்க முன்னர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றியவர். பின்னர், சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் இணைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத் திரட்டிக் கொடுத்த சிறிலங்காவின் முக்கிய கல்வியாளர்களில் இவரும் ஒருவர். மேலும் சிறிலங்காவுக்கு எதிராக சுமத்தப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும் வன்மையாக மறுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது