புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண !
ஒரே நாளில், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது பாலச்சந்திரன் கொலை தொடர்பாக வெளியாகியுள்ள ஆதாரங்கள். இதன் தொடர்ச்சியான மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மன்னிப்புச் சபை, மற்றும் ஐ.நா அதிகாரிகள் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். ஜெனீவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுரவுள்ள தீர்மாணம் வலுப்பெற்று வருகிறது. இதனை உடைக்க இலங்கை கடந்த பல மாதங்களாக பல நாடுகளை அணுகி தமக்கு ஆதரவு சேர்த்து வந்தது. ஆனால் அவை அனைத்தும் ஒரே நாளில் உடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இதனை எவ்வறு ஈடுசெய்வது என்பது தொடர்பாக இலங்கை அரசானது, சிங்கப்பூரில் உள்ள சிங்கள புத்திஜீவிகளை அணுகியுள்ளது என்றும் விடையமறிந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் தற்போது கசிந்துள்ளது.