தற்கொலைத் தாக்குதலை ஐ.நாவில் போட்டு காட்டிய இலங்கை
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் சென்ற பெண் ஒருவர், அவரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. நவம்பர் மாதம் 2007ம் திகதியன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இத் தாக்குதல் நடைபெற்றவேளை டக்ளஸ் அலுவலகத்தில் இருந்த CCTV இல் இக் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை இலங்கை அரசு எடுத்து இதனை ஐ.நா அமர்வுகளில் காட்ட முற்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக
நேற்றைய தினம் சில நாடுகளின் தூதுவர்களை அழைத்து ஜெனீவாவில் இதனை இலங்கை அரசு காண்பித்துள்ளது. காலம் மக் ரே அவர்கள் வெளியிட்டுள்ள ஆவணப்படத்துக்கு எதிராகவே இதனை இலங்கை அரசு திரையிட்டுவருகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இக் காட்சிகளைப் பார்வையிட்ட சில வெளிநாட்டுத் தூதுவர்கள், அது தொடர்பாக தமது கருத்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்கள் எனவும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது.