ஜெயலலிதாவுடன் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு! ஜெ. கையில் 7 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்!

தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ.
சாந்தி ராஜமாணிக்கம் 29.05.2013 புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தொகுதி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு மனு கொடுத்தனர்.
இந்நிலையில் அதிமுகவுக்கு தாவும் தேமுதிக எம்எல்ஏக்கள் வரிசையில் புதியதாக வந்திருப்பவர் மாஃபா பாண்டியராஜன்.
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் 12.06.2013 புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்தார். இவரும் 6 எம்எல்ஏக்கள் போலவே, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தொகுதி பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு மனு கொடுத்துள்ளார்.