புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் தமது பெண்கள் அணியை சுயேட்சையாக களமிறக்கியது ஈ.பி.டி.பி
இவர்கள் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்ததோடு அவர்களது வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவியாகவும் முதன்மை வேட்பாளராகவும் உள்ள செல்வி தம்பிபிள்ளை இருதயராணி ஈ.பி.டி.பி யினருடன் இணைந்து அவர்களது அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் ஈ.பி.டி.பியில் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினைச் சேர்ந்த சுகுசிறிதரனின் பாரியரான திருமதி ஞானசக்திக்கு ஈ.பி.டி.பி யினரே ஆசனத்தை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந் நிலையிலேயே இந்த குழுவினர் இன்று காலை சுயட்சையாக களமிறக்கப்பட்டுள்ளனர். வட யாழ்ப்பாணத்திலுள்ள பெண் தலைமைக் குடும்பங்களே தமது வாக்கு இலக்கு என இவர்கள் தெரிவித்துள்ளனர்.