கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் உட்பட 200 பேர் கைது
இலங்கையில் நடக்க உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்டம்பர் 12ம் திகதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, தடையை மீறி இன்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற திருமாவளவன் உள்பட 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.