சுவிஸில் கட்டாய இராணுவ சேவை இரத்து செய்ய கூடாது
சுவிட்சர்லாந்தில் கட்டாய இராணுவ சேவையை இரத்து செய்ய வேண்டுமா என நேற்று நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இராணுவ சேவையை இரத்து செய்வதற்கு
எதிராக 73 வீத வாக்குகளும் ஆதரவாக 27 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
26 மாநிலங்களிலும் நேற்று இத்தேர்தல் நடத்தப்பட்டது.
சுவிட்சர்லாந்து குடிமக்களில் 18வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்ட ஒவ்வொருவரும் கட்டாய இராணுவ பயிற்சியை எடுக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை இரத்து செய்ய வேண்டும் என்றும் கட்டாய இராணுவ சேவை நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதற்கான தோற்றப்பாட்டை கொண்டிருப்பதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டி வந்தன.
இராணுவ பயிற்சி பெற்றவர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் இச்சட்டமூலம் வழிவகுக்கிறது. எனவே கட்டாய இராணுவ சேவையை இரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்தே நேற்று நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனினும் கட்டாய இராணுவ சேவையை இரத்து செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே நேற்று நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனினும் கட்டாய இராணுவ சேவையை இரத்து செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.