கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார்.
கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.
தி.பரந்தாமன் (வழுதி) தலைமையில் 3 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் – பொருளியல் விரிவுரையாளர் வரதராஜன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டு வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பான தமது கருத்துக்களை வழங்கினர்.
இங்கு தனது கருத்துக்களைத் தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன்..
‘எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது. நீண்ட கால இழுத்தடிப்புக்குப் பின்பு, சர்வதேச அழுத்தங்களினால் நடத்தப்படவுள்ள இந்தத் தேர்தலின் முடிவை பல நாடுகள் உன்னிப்பாக அவதானித்தபடி உள்ளன.
எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பாரிய வெற்றி ஒன்றைப் பெறுவதை தமிழ் பேசும் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே, தாம் ஒரு தோற்றுப்போன இனமல்ல என்பதையும், தங்களுடைய தன்னாட்சி உரிமையைத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் உறுதியாக வலியுறுத்துகிறார்கள் என்பதையும், இலங்கை அரசுக்கும், எம் மீது அக்கறை காட்டுகின்ற நாடுகளுக்கும் நாம் தெளிவுபடுத்த முடியும்.
1987ஆம் ஆண்டு, இந்திய – இலங்கை உடன்படிக்கை கையெழுத்திடப்படுவதற்கு முன்பதாக தமிழ் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய எங்களை அழைத்து அந்த ஒப்பந்தத்தின் நகலை திரு ராஜீவ் காந்தி அவர்கள் வழங்கினார். அதனைப் படித்துப் பார்த்ததன் பிரகாரம் அந்த உடன்படிக்கையின் வாயிலாக உருவாக்கப்படவிருந்த மாகாணசபை முறை தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பூர்த்தி செய்யாது என்பதை நாம் கண்டறிந்தோம். அந்த விடயத்தை திரு. ராஜீவ் காந்தி அவர்களிடம் அப்போதே நாங்கள் மிகத் தெளிவாக தெரிவித்துமிருந்தோம்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ராஜீவ் காந்தி அவர்கள், 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொள்ளும்படியும், படிப்படியாக அதனைப் பலப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். ஆனாலும், மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்ந்தும் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே.
நாங்கள் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாவிட்டால் நிச்சயமாக இந்த மாகாணசபை அதிகாரம் அரச கட்சிக்குச் செல்லும். மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சியே மாகாண சபையையும் ஆளுமானால், மாகாண சபை முறைமையில் இருக்கின்ற குறைபாடுகளும், அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வகையிலும் பூர்த்தி செய்யவில்லை என்ற விடயமும் நிரூபிக்கப்பட முடியாமல் போய்விடும்.
எனவே இந்த நிரூபனத்தை நடைமுறையில் காட்டுவதற்காக இந்த மாகாணசபைத் தேர்தலில் நாம் போட்டியிட்டே ஆக வேண்டும். போட்டியிடுவது மட்டுமல்ல, அதில் நாம் மகத்தான வெற்றியையும் பெற வேண்டியது கட்டாயமாகும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தம்மால் தடுத்துவிட முடியாதென்பதை பல தடவைகள், பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே தெரிவித்திருக்கின்றார்.
இருந்தாலும், அரசாங்கம் இப்போது எடுக்கும் கடும் முயற்சிகள் எல்லாமே கூட்டமைப்பு பெறக்கூடிய மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மையைத் தடுப்பதற்கான முயற்சிகளே. அந்த முயற்சிகளின் அங்கமாகத்தான் பல கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் அரசாங்கம் களமிறக்கியுள்ளது.
அதனால், வாக்குரிமை உள்ள ஒவ்வொரு வட மாகாணத் தமிழரும் – குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத் தமிழர்கள் சிரமங்களைப் பொருட்படுத்தாது தங்களது வாக்குகளை கட்டாயமாகச் செலுத்த வேண்டும்.
வட மாகாணத்தில் இருக்கின்ற இராணுவ ஆதிக்கம், நிலப்பறிப்பு, பௌத்த மயமாக்கல், காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள் என்றவாறாக – தமிழ் மக்களின் சார்பில், அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லுகின்றது.
வட மாகாணத்தில் இருக்கின்ற இராணுவ ஆதிக்கம், நிலப்பறிப்பு, பௌத்த மயமாக்கல், காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள் என்றவாறாக – தமிழ் மக்களின் சார்பில், அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லுகின்றது.
பொருளியல் விரிவுரையாளர் வரதராஜன் அவர்கள் உரையாற்றும் போது, ‘தனிப்பட்ட முறையில், இந்த மாகாண சபை முறைமையை நான் நிராகரிக்கின்றேன். இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வகையிலும் பூர்த்தி செய்யவில்லை என்ற எனது நிலைப்பாட்டை நான் தெளிவாகவே பதிவு செய்து வந்திருக்கின்றேன்.
இருந்த போதும் – இந்த மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட கடந்த 26 வருடங்களில் முதற்தடவையாக, மத்திய அரசாங்கத்தை ஆளுகின்ற கட்சி அல்லாத வேறு ஒரு கட்சி ஒரு மாகாண சபையைக் கைப்பற்றப் போகின்றது. அந்த சரித்திர நிகழ்வு இந்த வட மாகாணசபைத் தேர்தலோடு அரங்கேறப் போகின்றது.
அதன் பின்பு, மத்திய அரசாங்கத்தைக் கேள்விகளுக்கு உட்படுத்தக்கூடியதும், கூடுதல் அதிகாரங்களைக் கோரக் கூடியதுமான வல்லமையுடன் ஒரு மாகாணசபை உருவாகும். அந்த ஒரு காரணத்திற்காகவேனும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பக்கு வாக்களித்து வடக்கு மாகாண சபையைக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மையுடன் கைப்பற்றுகிற ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டார்.
அத்தகைய தகுதிப் பண்புகள் நிறைந்த ஒருவராகவே திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை நான் கருதுகின்றேன்.’ என்று கூறினார்.
இந்தத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம், வரலாற்றை உருவாக்குவதில் ஒரு பங்கை நீங்கள் வகிக்க உள்ளீர்கள் என்பதனையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதனால், யாழ்ப்பாணத்தில் வாக்குரிமை உள்ளவர்கள் சிரமம் பாராது அங்கு சென்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். அங்கு வாக்குரிமையைப் பேணாதவர்கள், அங்கு வாழுகின்ற உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி – அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும்.
வீட்டிலிருந்து வெளியேறிச் சென்று மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு கூடுதல் வாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும்,’ என்று குறிப்பிட்டார்.
அத்தகையவர் – மக்களில் ஒருவாராக மக்களோடு வாழ்கின்ற எளிமையானவராகவும் இருக்கின்ற அதே வேளையில் – தாம் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் தொடர்பாகத் தமது கட்சியின் தலைமை வகுக்கின்ற கொள்களில் ஓரளவுக்கேனும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஆற்றலும் அனுபவமும் அதிகாரமும் உடையவராகவும் இருக்க வேண்டும்.
யாழ் மாவட்ட வேட்பாளர்களுள் மிகச் சிலரே அத்தகைய வல்லமை உடையவர்களாக இருக்கின்றனர்ளூ அந்த வகையில், அப்படியானவர்களுள் ஒருவராக – தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பு வகிக்கின்ற ஐந்து கட்சிகளுள் ஒன்றின் தலைவரான சித்தார்த்தன் அவர்களை நான் கருதுகின்றேன்’ என்றும் பரந்தாமன் குறிப்பிட்டார்.
- See more at: http://www.athirady.com/tamil-news/news/264706.html#sthash.5pLCXnBN.RS2VtuYH.dpuf