""ஹலோ தலைவரே... நான் குற்றவாளின்னா பிரதமர் மன்மோகன் சிங்கும் குற்றவாளிதான்னு நிலக்கரி சுரங்கம் தொடர்பான சி.பி.ஐ வழக்கின் எஃப்.ஐ.ஆரில் ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார்மங்கலம் பிர்லாவோடு சேர்ந்து இடம்பெற்றிருக்கிற
நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் அதிரடியா சொல்லியிருக் காரே?''
""இப்பதான் இதை ஊடகங்கள் பெருசா வெளியிடுது. இதையேதான் 2ஜி விவகாரம் ஆரம்பமானதிலிருந்தே ஆ.ராசாவும் சொன்னார்.. சொல்றார்.. சொல்லிக்கிட்டே இருக்கிறார்.''
""இந்த நிலக்கரி விவகாரம் பற்றி சொல்றேங்க தலைவரே.. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யும் ஆதித்ய பிர்லாவின் ஹிந்தால்கோவும் டெண்டர் கேட்டிருக்குது. இரண்டுமே தகுதியான நிறு வனங்கள்தான். முதலில் என்.எல்.சி.க் குத்தான் ஒதுக்க முடிவு செய்திருக்காங்க. அப்புறம் பிரதமர் அலுவலகத்திலிருந்து பரிந்துரைத்ததையடுத்துதான் பிர்லா கம்பெனிக்கும் சேர்த்து ஒதுக்கியிருக் காங்க. தகுதி வாய்ந்த இரண்டு நிறு வனங்களுக்கு ஒதுக்கியது தவறுன்னா, அதற்குப் பரிந்துரைத்த பிரதமரும் தவறு செய்தவர்தானேன்னு முன்னாள் செயலாளர் பரேக் கேட்குறாரு.''
""நல்ல கேள்விதான். 2ஜியில் கிளம்பிய கேள்விக்கே இன்னும் பிரதமர் சைடிலிருந்து பதில் வரலையே.. ஆனா, இது தொழிலதிபர் சம்பந்தப்பட்ட விவகாரமாச்சே.. அதனால் பரபரப்பு அதிகமா இருக்கும். தேர்தல் நெருங்குற நேரத்துல பிரபல நிறுவனத்தின் ஓனர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டு சி.பி.ஐ. ரெய்டு அளவுக்கு நிலமை போக என்ன காரணமாம்?''
""நரேந்திர மோடியின் நடவடிக்கைகளை தமி ழகத்தை ஆள்பவர்களும் உன்னிப்பா கவனிக்கிறாங்களே.. 18-ந் தேதி அவரோட சென்னை விசிட்டையொட்டி அதற்கு முன்னதாகவே அரசியல் ஏரியா பரபரப்பாயிடிச்சே..'' …
""ஜெ.வைப் பொறுத்தவரை பா.ஜ.க எப்ப வேணும்னாலும் தன்னோடு கூட்டணிக்குத் தயாரா இருக்கும்ங்கிற கணக்கில் இருந்தார். ஆனா, கடந்த சில நாட்களா பா.ஜ.க.வின் நகர்வுகள் தொடர்பா அவருக்கு சந்தேகம் வந்திருக்குதாம். மதுரைக்கு அத்வானி வந்தபோது அவரைக் குறிவைத்து வைக்கப் பட்ட குண்டுகளை போலீஸ் முன்கூட்டியே கண்டறிஞ்சதும், தமிழக போலீசையும் ஜெ. அர சையும் அத்வானி பாராட் டினார். அந்த குண்டு வைப்பு சம்பவத்துக்கும் அதைத் தொடர்ந்து இந்து மத தலைவர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணமான போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் மூணு பேரையும் போலீசார் அரெஸ்ட் செய்திருக்கிற நிலையில் அதற்காக தன்னோட அரசை அத்வானி, ராஜ்நாத்சிங், மோடி இவங்களெல்லாம் பாராட்டுவாங்கன்னு ஜெ. எதிர்பார்த்திருக்கிறார்.''
""மூவரில் ஒருத்தர்கிட்டேயிருந்துகூட வாழ்த்தோ, பாராட்டோ வரலையே?''
""தீவிரவாதிகளைப் பிடித்த போலீசாருக் குப் பரிசுகளை அறிவிச்சதும் பாராட்டு கிடைக்கும்னு ஜெ. எதிர்பார்த்திருக்கிறார். அப்பவும் பா.ஜ.க. தரப்பு கண்டுக்கலை. அதனாலதான் ஜெ.வுக்கு சந்தேகம். ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டு பல கட்சிகளுக்கும் கலைஞர் கடிதம் எழுதினாரு. பா.ஜ.க.வுக்கும் கடிதம் போயி ருக்குது. ஆதரவு இல் லைன்னு பா.ஜ.க. வெளிப்படையா எந்தப் பதிலும் அனுப்பலை. அத னால அ.தி.மு.க.வையும் தி.மு.க.வை யும் பா.ஜ.க. தலைவர்கள் ஒரே தட்டில் வைத்து எடை போடுறாங்களோன்னு ஜெ.வுக்கு சந்தேகம் அதிகமாயிடிச்சாம்.''
""பா.ஜ.க.வின் பார்வை தி.மு.க பக்கம் திரும்பியிருக்குதா? தி.மு.க சைடில் என்ன மூவ் நடக்குது?''
""தேசிய கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.க.வும் தமிழகத்தில் தி.மு.க.வுடனான கூட்டணி அவசியம்னு நினைக்குது. காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கக் கூடாதுன்னு உண்ணாவிரதம் இருந்த தோழர் தியாகுவோட உடல்நிலை பற்றி கலைஞர் சார் பில் பிரதமரிடம் பேச டி.ஆர்.பாலு போனப்ப உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததுடன், உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி உடனடியா கலைஞருக்கு கடிதம் எழுதி அதை பாலு கையிலேயே கொடுத் தனுப்பியிருக்கிறார் பிரதமர். முன்பெல்லாம் டி.ஆர்.பாலுவைக் கண்டுக்காத டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் இப்ப, நமஸ்தே சொல்லி பேசுறாங்களாம். பா.ஜ.க சைடிலிருந்தும் தி.மு.க மீது கரிசனப் பார்வை திரும்பியிருக்குது.''
""அவங்க மூவ் என்ன?''
""அரசியல் கட்சிகள் எதுவும் எந்த வாசலையும் மூடிவைக்கலை. எல்லாக் கதவுகளும் திறந்துதான் இருக்குதுன்னு சொல்லு. பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் திடீர்னு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோடு நடத்திய சந்திப்புகூட கூட் டணிக்கான அச்சாரம்னு சொல்றாங்களே?''
""பா.ம.க. சார்பில் 12 தொகுதிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தப்ப அதற்கான செலவை ரங்கசாமிதான் கவனிச்சிக்கிட்டாராம். பா.ம.க. வும் என்.ஆர்.காங்கிரசும் எம்.பி. தேர்தலில் கூட்டணி அமைச்சுப் போட்டியிடும்ங்கிற எதிர்பார்ப்பு உருவாயிடிச்சி. என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவோடு புதுச்சேரி எம்.பி. தொகுதிக்குப் போட்டியிடுவதுன்னும், வேட்பாளராகக்கூட என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினரா இல்லாத ஒருத்தரை ரங்கசாமியே சிபாரிசு செய்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தேர்தல் செலவு களையும் பா.ம.க.வே ஏற்றுக்கொள்ளும்னும் அன்புமணி மூலமா பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சொல்லி அனுப்பியிருக்காரு. அதைப்பற்றி அன்புமணியும் ரங்கசாமியும் பேசியிருக்காங்க. ஆனா, ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிச்ச தால பா.ம.க நினைச்சது புதுச்சேரியில் நடக்கல. ஆனா, வரும் 21-ம் தேதியன்னைக்கு 6 எம்.பி. தொகுதிக்கான பா.ம.க வேட்பாளர் களை சென்னையில் அறிவிக்க ராமதாஸ் ரெடியாயிட்டாராம்.''
""எனக்கும்கூட தகவல் வந்துச்சுப்பா.. தர்மபுரியில் அன்புமணி, கிருஷ்ணகிரியில் கோ.க.மணி, ஆரணியில் ஏ.கே.மூர்த்தி, கடலூ ரில் டாக்டர் கோவிந்தசாமி, திருவண்ணா மலைக்கு எதிரொலி மணியன், அரக்கோ ணத்தில் வேலு, கள் ளக்குறிச்சியில் சண் முகம், சேலத்தில் பசுமை தாயகம் அருள், புதுச்சேரியில் அனந்த ராமன்னு இப்போ தைக்கு ராமதாஸ் கையில் உள்ள பட்டியலில் பெயர்கள் இருக்குதாம்.''
""களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பலரும் வலுவான கூட்டணி இல்லாமல் எப்படி பணத்தை செலவு செய்வதுன்னு யோசிக்கிறதா ஒரு தகவல் வருதே..''
""நியாயமான யோசனைதானே.. அதனால தான் பா.ம.க தலைமை வடநாட்டில் பா.ஜ.க. ஆதரவாளரா செயல்படும் ஒரு பரபரப்பு சாமியாரை காண்டாக்ட் பண்ணியிருக்குதாம். யோகா, பரம்பரை மருத்துவம்னு பேரு வாங்கிய அந்த பலே சாமியார் ஒரு சிக்கலில் மாட்டுனப்ப, மத்திய சுகாதாரத்துறை மந்திரியா இருந்த அன்புமணிதான் காப்பாத்தினாராம். அதற்கு நன்றிக்கடனா இப்ப அந்த சாமியார்கிட்டே தேர்தல் நிதி வசூலிக்க பா.ம.க தலைமை முடிவு செய்திருக்குது.''
""அ.தி.மு.க. தலைமையும் தி.மு.க. தலைமையும் முடிவில்லாத அறிக்கை போரைத் தொடர்ந்துக் கிட்டிருக்குதே.. அ.தி.மு.க.வின் 42-வது ஆண்டு விழாவுக்கான அறிக்கையில் கலைஞரை காய்ச்சி எடுத்திருந்தார் ஜெ. பதிலடியா ஜெ.வை வறுத் தெடுத்து கலைஞர் ஒரு அறிக்கை விட்டிருக்காரே.. அ.தி.மு.க.வின் ஆண்டு விழாவுக்குப் போயிருந் தியா?''
""நான் போயிருந்தேன்.. அங்கே கட்சிப்பிரமுகர்கள் உன்னிப்பா கவனிச்ச ஒரு விஷயத்தை சொல்றேன். கட்சிக்கொடியை ஏற்றிய ஜெ., விழா மலரை வெளியிட்டார். அதைப் பெற்றுக்கொண்டவர் தொழில்துறை மந்திரி தங்கமணி. இவர்தான் அ.தி.மு.க ஆட்சியின் முதலாமாண்டு நிறைவிலும் இரண்டாமாண்டு நிறைவிலும் சட்டமன்றத்தில் முதலில் பேச அனுமதிக்கப்பட்டவர். கட்சியின் செயற்குழு- பொதுக்குழுவிலும் இவர்தான் ஓப்பனிங். இப்ப ஆண்டுவிழாவிலும் முக்கியத்துவம். முன்னே இந்த இடத்தில் ஓ.பி.எஸ். இருந்ததையும் இப்ப தங்கமணி இருப்பதையும், சர்ச்சைக்குரிய துறையான தொழில் துறையில் அவர் தொடர்ந்து மந்திரியாக நீடிப்பதையும் சக மந்திரிகளே பொறாமையோடுதான் பார்க்குறாங்க.''