48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் விதி அமலில் உள்ள ஏற்காடு தொகுதியில், அமைச்சருடனான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது தேர்தல் விதி மீறலாகும்.என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரை சந்தித்ததற்காக, ஏற்கனவே ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வியாழக்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வியாழக்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஏற்காடு (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கான அட்டவணை 4–10–2013 அன்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சேலம் மாவட்டம் முழுவதற்கும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த வட்டார மேம்பாட்டு அதிகாரி கடந்த 16–ந்தேதி தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை (எடப்பாடி பழனிச்சாமி) அவருடைய வீட்டில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான சேலம் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து அந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளார். இது தொடர்பான அறிக்கை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இதுபற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு இந்திய தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியுள்ளது. நோட்டீசு கிடைத்த 48 மணி நேரத்துக்குள், தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதில் அனுப்பி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.