தமிழக வரலாற்றில் முதல் முறையாக சென்னை அண்ணா மேம்பாலம் சங்கிலியால் பூட்டப்பட்டு போக்குவரத்தை முடக்கினர் மாணவர்கள். இப்படியான போராட்டத்தை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை தமிழக உளவுத்துறை என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை பேருக்கு பணி இடமாற்றம் கிடைக்கப் போகிறதோ எனத் தெரியவில்லை.
இப்போராட்டத்தில் 70 மாணவர்கள், இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பல உணர்வாளர்கள் கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கைகள்:
1.முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடனே மறு சீரமைப்பு செய்.
2.கொளத்தூர் மணி மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தோழர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு.
இந்த நகர்வின் மூலமாக :-
1) தனி ஈழத்திற்கு ஆதரவாக இத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறவும்..
2) பொது வாக்கெடுப்பே நமது கோரிக்கை அதுவே தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்கும் என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும்..
3) நமது கோரிக்கைகளை வலுவற்றதாக்கும் இந்தியாவின் சதிகளை முறியடிக்கவும் ..
தமிழக மக்களிடம் மாதிரி பொது வாக்கெடுப்பை எடுக்க இருக்கிறோம்!
எங்களது வாக்குபதிவு செய்யும் மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று இடங்களில் நிறுவ உள்ளோம் .பொதுமக்கள் அங்குவந்து அவர்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்.
இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு பதிவு செய்வோம்.
பெரு நகரங்களில் மக்கள் கூடும் வணிக வளாகங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்போம் .
இணைய தளத்திலும் வாக்கு சேகரிப்பு நடைபெறும்.
இதுமட்டுமல்லாமல் புலம் பெயர் தேசங்களில் இருக்கும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் நமக்கு ஆதரவாக அவரவர் நாடுகளில் மாதிரி பொது வாக்கெடுப்பை நடத்த உள்ளார்கள் .
ஜனவரி 1 முதல் 15 வரை மாதிரி பொதுவாக்கெடுப்பு நடக்கும் .
தமிழீழமே தீர்வு என்பதை அதன் முடிவு தீர்மானிக்கட்டும் !
இவ்வாறு மாணவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.