இந்தியப் பிரதமரின் முடிவால் எமக்கு பாதிப்பு ஏற்படாது - ஜி.எல். பீரிஸ்

இலங்கை பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதது தமக்கு தோல்வி இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் வராமல் இருக்க முடிவு செய்திருப்பது எங்களின் மாநாட்டின் வெற்றியைப் பாதிக்காது. அதனை நாங்கள் ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை.அவரது முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, நாங்கள் அவரை அழைத்தோம், அவர் வந்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம் என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.