கூட்டணி பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும்: 2016ல் சென்னை கோட்டையில் தேமுதிக ஆட்சி: பிரேமலதா பேட்டி
மாநாட்டு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,
எறஞ்சியில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு
கொடுத்தோம். ஆனால் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை. ஆனால் கண்டிப்பாக அனுமதி பெற்றுதான் மாநாட்டை நடத்துவோம்.
செஞ்சி கோட்டை வடிவில் உள்ள முகப்பு வாயிலுடன் இந்த மாநாட்டை நடத்துகிறோம். எனவே 2016ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று சென்னை கோட்டையில் தே.மு.தி.க. ஆட்சி நடைபெறும்.
வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து கேப்டனின் முடிவை இந்தியாவே எதிர்பார்த்து கொண்டுள்ளது. தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு கூட்டணி குறித்து தே.மு.தி.க.வின் முடிவு மாநாட்டில் அறிவிக்கப்படும்.
டெல்லி மேல்–சபையில் ஒரு இடத்துக்கு தே.மு.தி.க. போட்டியிடுவதால் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவேதான் தே.மு.தி.க. வேட்பாளரை நிறுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.