அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய அதிகார சபை
கொழும்பு கட்டுநாயக்க மற்றும்
கொழும்பு - காலி அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடுகள், நிர்வகிப்பு மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் அதிகார சபையினூடாக முன்னெடுக்கப்பட தற்பொழுது நெடுஞ்சாலை தொடர்பான சகல நடவடிக்கைகளும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாகவே மேற்கொள்ளப் படுகிறது.
வெளிச்சுற்று வீதியில் கொட்டாவயில் இருந்து கடுவல வரையான பகுதி மற்றும் தெற்கு அதிவேக பாதையின் பின்னதுவவில் இருந்து மாத்தறை வரையான பகுதி என்பன மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளன.
நிர்மாணிக்கப்பட உள்ள வடக்கு நெடுங்சாலையில் எடொரமுல்லயில் இருந்து தம்புள்ள மற்றும் கண் வரையான பகுதி மற்றும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான பகுதி மற்றும் இங்கிரியவில் இருந்த இரத்தினபுரி வரையான பகுதி என்பதை தொடர்பிலும் புதிய அதிகார சபை செயற்படும்.