தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய இங்கிலாந்து வீரர்கள்
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடனான ஆஷஷ் தொடரில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அவ்வணியுடனான ஒருநாள் தொடரில் மோதவுள்ளது.
இந்நிலையில் சிட்னியில் உள்ள அறக்கட்டளை நிலையம் ஒன்றுக்கு நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ப்ரொட்டும் பிரையரும் தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்க திரும்பிக்கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த உயிர் காக்கும் உயரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ப்ரொட்டும் பிரையரும் ஹோட்டலுக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் டார்லிங் ஹார்பர் பகுதியின் பாலத்தில் நின்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது கைத்தொலை பேசி மற்றும் சில உடமைகளை ஆற்றில் வீசுவதை அவதானித்தனர். பின்னர் குறித்த நபர் திடீரென பாலத்தின் முனைக்கு சென்று குதிப்பதற்கு தயாரானார்.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட ப்ரொட்டும் பிரையரும் லாவகமாக பேசி அவரை தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்து அழைத்து வந்ததனர். பின்னர் பொலிஸுக்கு தகவலை தெரிவித் அவர்கள் பொலிஸார் அங்கு வந்ததும் குறித்த நபரை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர்.
இங்கிலாந்து வீரர்களின் இந்த உயிர் காக்கும் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பிரையர் இது குறித்து கூறும்போது ‘எங்கள் நிலையில் யாராக இருந்தாலும் அவர்களும் இதுபோன்றே செயல்பட்டிருப்பார்கள்’ என தன்னடக்கமாக கருத்து கூறியுள்ளார்.