நிரந்தரமான நீக்கம் இருக்குமா? மு.க.அழகிரி நீக்கம் குறித்து துரைமுருகன் பதில்!
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன்,
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டது தற்காலிகமானது தான். மு.க.அழகிரியின் நடவடிக்கையை பொறுத்தே அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க தலைமை முன்வரும் என்றார்.
கேள்வி: எந்த விதத்தில் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்?
பதில்: அதையெல்லாம் பட்டியல் போட்டுக்கிட்டு இருக்கமுடியாது.
கேள்வி: தற்காலிகமான நீக்கமா?
பதில்: ஆமாம்.
கேள்வி: இதன் பிறகு நிரந்தரமான நீக்கம் ஏதும் இருக்குமா?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு பதில் அளித்தார்.