கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழாவின் காலை
நிகழ்ச்சிகள் 9.30 மணிக்கு புதிய கதிரேசன் கோயில் அறங்காவலர் எஸ். சுப்பிரமணியம் செட்டியார் தம்பதியினரின் மங்கல விளக்கேற்றலுடனும், செல்வி கவினாளி ஸ்ரீஸ்சுந்தரராஜாவின் கடவுள் வாழ்த்துடனும் ஆரம்பமாகும். தலைமையுரையை சமூக ஜோதி எம். ஏ. ரபிக்கும் தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரனும் நிகழ்ததுவார்.
பேராசிரியர் இரா. செல்வகணபதி ‘வள்ளலையே அனையான், என்னும் தலைப்பிலான தனியுரை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து ‘உயர் கம்பன் காட்டும் ஒப்பில்லா உறவு எது?’ எனும் பொருளில் விவாத அரங்கு இடம்பெறும். இந்நிகழ்விற்கு இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் நடுவராய் விளங்குவார். ‘குருவே’ என கு. அசோக்பரனும், ‘தந்தையே!’ என கு. புரந்தனும், ‘தாயே!’ என கு. சிவஞானசுந்தரமும், ‘கணவனே!’ என இ. சர்வேஸ்வராவும், ‘நண்பனே!’ என ச, லலீசனும், ‘சகோதரனே!’ என த. நாகேஸ்வரனும், ‘மனைவியே!’ என சி. கேசவனும், ‘பகைவனே!’ என கு. பாலசண்முகனும் வாதிடவுள்ளனர்.
இந்நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ எம். சரவணன் கலந்துகொள்வார்.
இன்று மாலை விழா 4.30 மணிக்கு பி. கபிலதாஸ் குழுவினரின் மங்கல இசையுடன் ஆம்பமாக உள்ளது. இந்நிகழ்வின் மங்கல விளக்கினை சமுதாயப் புரவலர் ஏ. எம். சுப்பிரமணியம் தம்பதியினர் ஏற்றி வைக்கவுள்ளார். கடவுள் வாழ்த்தினை திருமதி ஹேமா கபிலதாஸ், திருமதி நீதிமதி யோகராஜா ஆகியோர் இணைந்து இசைக்கவுள்ளனர். தலைமையுரையை வி. ஏ. திருஞானசுந்தரமும், தொடக்க உரையை நாவலர் நற்பணி மன்றத் தலைவர் என். கருணை ஆனந்தனும் ஆற்றவுள்ளனர். கடந்த ஓராண்டுக்குள் அமரர்களான அறிஞர்கள், பிரமுகர்களுக்கான அஞ்சலியரங்கு இடம்பெறவுள்ளது.
இவ்வரங்கில் கொழும்பு கம்பன் விழாவில் கலந்துகொண்ட புகழ் பெற்ற தமிழக பேராசிரியர் பெரியார்தாசன், கம்பன் கழக விருது பெற்ற எழுத்தாளர் பிரேம்ஜி ஆகி யோரின் திருஉருவப் படங்கள் திரை நீக்கம் செய்யப் பெறும். திருவுருவப் படங்களை புதுவைக் கம்பன் கழக இணைச் செயலாளர் கி. கல்யாண சுந்தரம் திரை நீக்கம் செய்து வைப்பார்.
நிறைவாக கம்பவாரிதி இ. ஜெயராஜ் நடுவராக சிறப்பிக்கும் ‘விடைகாண முடியாத விசித்திரம் பெரிதும் பொதிந்திருப்பது...’ என்ற சிறப்பு பட்டிமன்றத்தில் அகலிகை சாபவிமோசனத்திலேயே என த. இராமலிங்கமும் ந. விஜேயசுந்தரமும் ‘வாலி வதையிலேயே என வி. அசோக்குமாரனும் தி. திருநந்தகுமாரும், சீதை தீக்குளிப்பிலேயே என இரெ. சண்முகவடிவேலும் ரி. ரங்கராஜாவும் வாதிடுவார்கள்.