பங்களாதேஷ் அணிக்கு 467 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
இலங்கை பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 467 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 409 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி நான்காவது நாளில் மேலும் 17 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 426 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக சம்ஸ}ர் ரஹ்மான் மற்றும் இம்ருல் கைஸ் ஆகியோர் சதத்தைப் பெற்றதுடன் சஹிபுல் ஹசன் 50 ஓட்டத்தையும் மஹ்மதுல்லாஹ் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக கருணாரத்ன 15 ஓட்டங்களையும் சில்வா 29 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர் பின்னர் முதலாவது இன்னிங்ஸில் முச்சதம் பெற்ற குமார் சங்கக்கார 2வது இன்னிங்ஸிலும் சதம்பெற்று ஆட்டமிழந்தார்.அவர் 105 ஓட்டங்கள் பெற்றார். மஹேல ஜயவர்தன, 11 ஓட்டங்களையும் பெற்றார்
பின்னர் தினேஸ் சந்திமால் 100 ஓட்டங்களையும் அணித்தலைவர் அங்சலோ மெத்திவ்ஸ் 43 ஓட்டங்கள் பெற்ற போது இலங்கை அணி 305 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. பந்து வீச்சில் மஹமூதுல்லா 2 விக்கெட்டையும் சஹிப் அல் ஹஸன், சொகாக் காசி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.
இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்மித்த பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் 7 ஓட்டங்களையும் சம்சுர் ரஹ்மான் 4 ஓட்டங்களையும் பெற்றபோது ஆட்டம் நிறைவுக்கு வந்தது. பங்களாதேஷ் அணி 12 ஓட்டங்களைப் பெற்றது. இன்று போட்டியின் இறுதி நாளாகும்.