சுமார் 20,000 அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 16 இலக்கம் சிறைச்சாலையின் காவலர்களில் ஒருவரான லீ என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் நபரே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த 200 சதுர மைல் பரப்பளவான சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தும் காணாமல் போயும் உள்ளனர்.
அங்கு காவலர்களால் கழுத்தை இறப்பர் பட்டியால் இறுக்கி கொல்லப்படும் சிறைக்கைதிகளின் சடலங்கள் அந்த சிறைக்கூடத்தின் பின்னாலுள்ள குழியொன்றில் போடப்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
வட கொரிய சர்வாதிகாரி கிம் யொவ் உன்னுக்கு பிடிக்காத உயர்மட்ட அரசியல் கைதிகள் அவர்களது குடும்பங்களுடன் சிறைச்சாலை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அவர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
சிறைக்கைதிகளை குழிகளை தோண்டப்பணித்த பின் அவர்களின் தலையில் சம்மட்டியால் அடித்து அவர்களை படுகொலை செய்து அதே குழிக்குள் தள்ளும் நடைமுறையும் அந்த சிறைச்சாலையில் பின்பற்றப்பட்டு வந்தது.
அத்துடன் சிறைக்கைதிகள் 25 பாகை செல்சியஸ் அளவான தாழ்ந்த வெப்ப நிலையில் 7 மைல்கள் தூரம் நடந்து சென்று கடுமையான பணிகளில் ஈடுபடவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பலர் இதன்போது மரணத்தை தழுவியுள்ளனர்.