பந்தலூர் அருகே குள்ளமான வாலிபரை காதலித்து மணந்த பட்டதாரி இளம்பெண்
பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம். தோட்டத் தொழிலாளி. இவருடைய மகன் ஸ்ரீதரன் (25). மூன்றரை அடி உயரமே உள்ளவர். பிளஸ் 2 படித்து கம்ப்யூட்டர் படிப்பு முடித்து எருமாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் தற்காலிக கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
எருமாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆப்ரகாம். விவசாயி. இவருடைய மகள் ஜெசீந்தா(22). பி.எஸ்.சி. பட்டதாரி. இவரும் எருமாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மூன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதரனும், ஐந்தே முக்கால் அடி உயரமுள்ள ஜெசீந்தாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நேற்று சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. குள்ளமான ஸ்ரீதரன் உயரமான பெண்மணியை திருமணம் செய்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது