பிரசன்ன, ஷான், ஹிருனிக்கா விருப்பு வாக்குகளில் முதலிடம்

கொழும்பு மாவட்ட த்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஹிருனிக்கா பிரேமச் சந்திர ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப்
பெற்றுள்ளார். அதேபோன்று மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்ட த்தில் ஆகக் கூடிய விருப்பு வாக்கு களையும் தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் காலி மாவட்டத்தில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளையும் பெற்றதாகவும் தெரிய வருகிறது.
இவர்களது விருப்பு வாக்கு விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.