இதனால் திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால்
பிரச்னை எழுந்தது. இருப்பினும் தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கு மிக்க தொகுதி என்பதால் இது தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையில் இருந்தனர்.பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால்
இந்த சூழலில் பா.ஜ.க. கூட்டணி தொகுதி உடன்பாட்டில் திருப்பூர் தொகுதி பா.ஜ.க. அல்லது கொ.ம.தே.க.வுக்கு தான் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. தே.மு.தி.க. தலைமையும் இதனை உறுதிப்படுத்தியது. இதனால் அதிருப்தியடைந்த தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் மற்றும் தொண்டர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தே.மு.தி.க.வைச் சேர்ந்த லட்சுமணன் என்ற தொண்டர், உடலில் மண்ணெணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தொடர்ந்து மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் தங்கவேல், துணைச் செயலாளர் கோவிந்த்ராஜ், செந்தில், குழந்தை வேல் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள் என நிர்வாகிகள் 60 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனையடுத்து நிர்வாகிகளிடம் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொகுதியை பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.