பொன்னணிகளின் போரில் ஒருவர் அடித்துக் கொலை; வட்டு. பொலிஸாரும் ஒத்துழைப்பு
உயிரிழந்தவர் மார்ட்டின் வீதியைச் சேர்ந்த அமலன் ( வயது 23) என்பவராவார். யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் பொன்னணிகளின் போர் என்று அழைக்கப்படும் ஒரு நாள் போட்டி இன்று வட்டு. யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வந்தது.
அதன்போது சென்பற்றிக்ஸ் கல்லூரி அணி அதிக ஓட்டங்களுடன் முன்னிலையில் இருக்கும் போது பிற்பகல் 1.45 மணியளவில் மைதானத்திற்குள் நுழைந்த கும்பலினால் அங்கிருந்தவர்கள் தாக்கப்பட்டனர்.
அதில் குறித்த சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனான அமலன் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து போட்டி இடைநடுவில் கைவிடப்பட்டது. இருப்பினும் குறித்த போட்டிக்கு வட்டுக்கோட்டைப் பொலிஸார் பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.
அத்துடன் அவர்களின் கண்ணுக்கு முன்னாலேயே குறித்த தாக்குதல் நாடாத்தப்பட்டது. அத்துடன் இறந்தவரின் நண்பர்கள் தாக்குதல் குறித்து பொலிஸாரிடம் கூறியும் அவர்கள் எதுவிதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.
இருப்பினும் தகவல் வழங்கியவர்களை கைது செய்வோம் என்றும் பொலிஸ் நிலையத்தில் வந்து முறைப்பாட்டை பதிவு செய்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கும்பலுக்கு சம்பவ இடத்தில் இருந்த சிவில் உடையில் நின்ற பொலிஸ் ஒருவரால் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து மைதானத்தை விட்டு தப்பியோடிவிட்டனர்.
எனினும் அவர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிள்கள் மைதானத்திற்குள் நின்றதாகவும் பின்னர் பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களும் உறவினர்களும் வருகை தந்தமையால் அங்கு பதட்டம் நிலவி வருகின்றது. இதனையடுத்து பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சென்பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தராமையினால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி கட்டடங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. எனினும் தற்போது யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://onlineuthayan.com/News_More.php?
பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்தில்
வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் மார்ட்டின் வீதியைச் சேர்ந்த அமலன் ( வயது 23) என்பவராவார். யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது.